9 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன் கொடுமை.. உண்மையைக் கண்டுபிடித்தாளா கார்கி

சாய் பல்லவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து கொண்டுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணான கார்கியின் அப்பா ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வாட்ச் மேனாக வேலைபார்த்துக் கொண்டுள்ளார்.

கார்கி ஒருவரை காதலித்து வந்தநிலையில் அவரது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்துக் கொண்டுள்ளார். இந்தநிலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் 9 வயது சிறுமி ஒருவர் வடமாநில இளைஞர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்.

இந்த வழக்கில் காவலாளி வேலை செய்யும் சாய் பல்லவியின் தந்தையும் சேர்க்கப்படுகிறார். சாய் பல்லவியின் தந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட குடும்பத்தினர் எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்பதே கதையாகும்.

அதனைத் தொடர்ந்து சாய் பல்லவி பாலியல் குற்றத்தில் தந்தை தவறாக கைது செய்யப்பட்டது குறித்து எப்படி நிரூபிக்கிறார் என்பதே கதையாகும்.

மேலும் சாய் பல்லவியின் தந்தைக்குப் பதிலாக அந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் யார் என்பதே கதையின் ட்விஸ்ட் ஆகும். நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிப்பைத் தாண்டி வாழ்ந்து காட்டவே செய்துள்ளார்.

வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள காளி வெங்கட் முதிர்ச்சியான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சரவணன் ஆகியோர் நடிப்பு பாராட்டும்படியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் பிரேம்கிருஷ்ணா கதையினை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் சமூக அவலத்தினை சிறப்பாக தன்னுடைய நேர்த்தியான கதையில் கூறியுள்ளார்.