இராக்கெட்ரி படத்தால் சொந்த வீட்டையே விற்ற நடிகர் மாதவன்.. ஹைய்யோ இப்படியா ஆச்சு!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் 2000 ஆம் ஆண்டு துவங்கி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக இராக்கெட்ரி திரைப்படத்தினை இயக்கி, தயாரித்து மற்றும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராக்கெட்ரி திரைப்படம் வசூலினைப் பொறுத்தவரை மோசமான வசூல் செய்துள்ளதாகவும், அதனால் மாதவனுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து மாதவன் வீட்டை விற்றுவிட்டு கஷ்டப்பட்டு ட்விட்டரில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து மாதவன் அதற்கு பதில் அளிக்கும் வகையில் போஸ்ட் போட்டுள்ளார்.

இராக்கெட்ரி படத்தால் சொந்த வீட்டையே விற்ற நடிகர் மாதவன்:

மாதவன் தன்னுடைய போஸ்ட்டில், “ஓ. தயவு செய்து என் தியாகத்திற்கு அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ எதையோ இழக்கவில்லை.

உண்மையில் இராக்கெட்ரி படத்தில் வேலை பார்த்த அனைவரும் கடவுளின் அருளோடு மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள் 😃😃🙏🙏

நாங்கள் அனைவரும் மிகவும் சிறப்பான மற்றும் பெருமையான லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன்.🚀❤️” என்று பதிவிட்டுள்ளார்.