சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறாரா நடிகை ரோஜாவின் மகள்.. அடுத்து ஒரு வாரிசு நடிகையா!

நடிகை ரோஜா 90’களில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய அவர் பல ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த ரோஜா, துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன்பின்னர் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி அந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறாரா நடிகை ரோஜாவின் மகள்:

இவருக்கு அன்சு மல்லிகா என்ற மகளும், கிருஷ்ணா லோகித் என்ற மகனும் உள்ளனர்.

ரோஜாவின் மகள் அன்சு மல்லிகா தற்போது அமெரிக்காவின் பிரபல கல்லூரி ஒன்றில் நடிப்பு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த படிப்பினைப் படித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அன்சு தி ஃபிளேம் இன் மை ஹார்ட் என்ற புத்தகத்தை எழுதி தென்னிந்திய அளவில் விருதைப் பெற்று இருந்தார்.

ரோஜா மகள் நடிப்பு சார்ந்த படிப்பினைப் படித்து ஹீரோயினாகப் போகிறாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.