விஜயை வற்புறுத்தி வாய்ப்பினைப் பெற்ற நடிகை த்ரிஷா.. ஓ இப்படித்தான் வாய்ப்பு கெடச்சுச்சோ! 

இளையதளபதி விஜயின் 65 வது திரைப்படமானது பீஸ்ட் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜயின் வாரிசு திரைப்படத்தினை தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா நடிக்கிறார்.

மேலும் இந்தத் திரைப்படத்தினை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் தில் ராஜு தயாரிக்கிறார். இந்தத் திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது.

விஜயை வற்புறுத்தி வாய்ப்பினைப் பெற்ற நடிகை த்ரிஷா:

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்து விஜயின் 67வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகிய வண்ணமே உள்ளது.

தளபதி 67 திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிய வண்ணமே உள்ளது.

மேலும் த்ரிஷாவின் மார்க்கெட் குறைந்துள்ளதால் அவரே விஜயை வற்புறுத்தி இந்த வாய்ப்பினைப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. என்ன மாதிரியாக வற்புறுத்தி த்ரிஷா இந்த வாய்ப்பினைப் பெற்றார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.