21 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் ஜோதிகா.. அதுவும் இப்படி ஒரு படத்திலா!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக ஜோதிகா முன்னணி கதாநாயகியாக இருந்துவருகிறார், 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ஜோதிகா.

சினிமாவுக்குப் பின்னர் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின்மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைய அடுத்து மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்தார்.

21 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் ஜோதிகா:

கடைசியாக இவர் நடித்த தம்பி, உடன் பிறப்பே மற்றும் பொன்மகள் வந்தாள் படங்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஜோதிகா தற்போது மம்முட்டியுடன் இணைந்து மலையாளத் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜோதிகா ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இந்தத் திரைப்படமானது இந்தியில் தயாராக உள்ளது. ஜோதிகா இந்தியில் 1998 ஆம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்கீனா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது மீண்டும் 21 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகா இந்தியில் நடிக்கவுள்ளது குறித்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.