தனுஷ் உடனான புகைப்படத்தை முதல்முறையாக தன்னுடைய சமூக வலைதளத்தில் ஷேர் செய்த ஐஸ்வர்யா.!

18 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் தங்களது விவாகரத்தினை அறிவித்தனர்.

ஐஸ்வர்யா – தனுஷ் மகன்களான லிங்கா, யாத்ரா இருவரும் அம்மாவுடன்தான் வசித்து வருகிறார்கள். இருப்பினும் அப்பா தனுஷை அவ்வப்போது சென்று பார்த்து வருகின்றனர்.

மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா – தனுஷ்:

அதனைத் தொடர்ந்து நேற்று தனுஷ் – ஐஸ்வர்யா தங்களின் பெரிய மகன் யாத்ராவின் பள்ளி விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

அதாவது யாத்ரா பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவியேற்றதைக் காண தனுஷ் – ஐஸ்வர்யா சென்றுள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்து மகன்களுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியது.

மேலும் இந்தப் புகைப்படத்தினை தர்சனா என்பவர் ஷேர் செய்து, “இந்த தனித்துவமான குழந்தைகளின் பெருமைமிக்க பெற்றோர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவினை ஷேர் செய்து ஐஸ்வர்யா, “உண்மை” என்று பதிவிட்டுள்ளார்.

விவாகரத்துக்குப் பின் தனுஷ் குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த ஐஸ்வர்யா முதல் முறையாக தனுஷ் உடனான புகைப்படம் குறித்து பதிவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யாவின் பதிவினைப் பார்த்த ரசிகர்களோ