இரண்டாம் திருமணம் குறித்து வாய் திறந்த அமலாபால்.. இன்ஸ்டா லைவில் அவர் சொன்னதைப் பாருங்க!

நடிகை அமலாபால் தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டநிலையில் ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பின்னர் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்த அமலாபால் ஆடை, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அதோ அந்தப் பறவை போல, கடவேர் என்ற தமிழ்த் திரைப்படங்களிலும், பரானு பரானு பரானு மற்றும் ஆடு ஜீவிதம் என்ற மலையாளப் படங்களிலும்  நடித்து முடித்துள்ளார்.

அமலாபால் இரண்டாம் திருமணம்:

அமலாபால் ஏ.எல்.விஜயைத் திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்டார். அதன்பின்னர் இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகள் பரவிய விதமே உள்ளன.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமலாபால் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.

அமலாபாலிடம் இன்ஸ்டா லைவில் ரசிகர் ஒருவர், “உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும்?” என்று கேட்டுள்ளார்.

அமலாபால் பளிச்சென்று, “அதை நானே  உண்மையாக இன்னும் கண்டுபிடிக்கவில்லை. என்னையே புரிந்துகொள்ளும் பயணத்தில்தான் உள்ளேன். கண்டுபிடித்தபின் கண்டிப்பாக சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.