வெளிநாட்டவரை மணந்த ஆண்ட்ரியாவின் தங்கை.. வைரலாகும் திருமண போட்டோஸ்!

ஆண்ட்ரியா பின்னணிப் பாடகியும் நடிகையும் ஆவார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வட சென்னை, விஸ்வரூபம், தரமணி, அவள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வடசென்னை மற்றும் தரமணி என்ற இரண்டு திரைப்படங்களுமே ஆண்ட்ரியாவின் நடிப்பினை மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த திரைப்படங்களாகும்.

சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகியது.

தற்போது ஆண்ட்ரியா விஜய் சேதுபதியுடன் இணைந்து பிசாசு 2 மற்றும் கா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுபோக சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா, ஓ ஓ சொல்றியா என்ற ஹிட் பாடலைப் பாடி இருந்தார்.

வெளிநாட்டவரை மணந்த ஆண்ட்ரியாவின் தங்கை:

நடிகை ஆண்ட்ரியாவுக்கு நாடியா என்ற தங்கை உள்ளார். நாடியா செட்ரிக் என்ற வெளிநாட்டவரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தங்கை நாடியாவின் திருமண புகைப்படத்தினை ஷேர் செய்து ஆண்ட்ரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.