மகன்களுக்காக மீண்டும் இணைந்த தனுஷ்- ஐஸ்வர்யா.. போட்டோஸ் பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

18 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் தங்களது விவாகரத்தினை அறிவித்தனர்.

ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை சமீபத்தில் இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா பாலிவுட்டில் களம் இறங்க உள்ளதாக அறிவித்தார்.

ஐஸ்வர்யா – தனுஷ் மகன்களான லிங்கா, யாத்ரா இருவரும் அம்மாவுடன்தான் வசித்து வருகிறார்கள். இருப்பினும் அப்பா தனுஷை அவ்வப்போது சென்று பார்த்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் உருக்கமான போஸ்ட்:

சமீபத்தில் லிங்கா, யாத்ரா இருவரும் தந்தை தனுஷுடன் த க்ரே மேன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா தங்களின் பெரிய மகன் யாத்ராவின் பள்ளி விளையாட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

அதாவது யாத்ரா பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவியேற்றதைக் காண தனுஷ் – ஐஸ்வர்யா சென்றுள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்து மகன்களுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விவாகரத்துக்கு பின் மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.