தனுஷின் திருச்சிற்றம்பலம் திரை விமர்சனம் இதோ!

தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கன்னா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம், இந்தத் திரைப்படத்தினை மித்ரன் ஆர். ஜவஹர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷ் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார், தனுஷின் அப்பா பிரகாஷ் ராஜ் போலீஸ் வேலை பார்ப்பவராக இருந்து வருகிறார்.

ஒரு விபத்தினால் தனுஷ் கோபத்தோடு அப்பா பிரகாஷ் ராஜிடம் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகிறார். தனுஷ்க்கு தாத்தா பாரதிராஜா என்றால் கொள்ளை பிரியம், அதுபோக தனுஷின் சிறுவயது முதல் தற்போதுவரை தோழியாக இருப்பவர் நித்யா மேனன்.

உணவை டெலிவரி செய்கையில் பள்ளியில் தன்னுடைய ஒரு தலைக் காதலி ராஷி கன்னாவை சந்திக்க அதன்பின் மீண்டும் இருவரும் நட்போடு பழகுகின்றனர்.

அதன்பின் தனுஷ் ராஷி கன்னாவிடம் ப்ரபோஸ் செய்ய, அவர் தனுஷின் காதலை நிராகரிக்கிறார். அடுத்து தனுஷ் இரண்டாவது முறை ப்ரியா பவானி சங்கரைக் காதலிக்கிறார். ப்ரியா பவானி சங்கரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

காதல் தோல்வியால் தவிக்கும் தனுஷுக்கு அவரது தாத்தா பாரதிராஜா சிறு வயது முதல் தோழியாக இருக்கும் ஷோபனாவைக் காதலிக்க ஐடியா சொல்கிறார்.

அதன்பின்னர் சிறிது காலம் தயக்கத்துடன் தனுஷ் காதலிக்கிறார் தனுஷ். அதன்பின்னர்தான் நித்யா மேனன் சிறு வயதில் இருந்தே தனுஷைக் காதலித்து வருவது தெரிய வருகின்றது.

அடுத்து என்ன நடந்தது என்பதே மீதிக்கதை, இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கத்திற்கு க்ளாப்ஸ்.

அனிருத்தின் பின்னணி இசையில் பாடல்கள் ஹிட்.