அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா.. ரசிகர்கள் பிரார்த்தனை!

பாரதிராஜா இயக்குனராகவும் நடிகராகவும் பணியாற்றி வருகின்றார். இவர் 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் பாரதிராஜா கிழக்கே போகும் ரெயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், வாலிபமே வா வா, கடலோர கவிதைகள், வேதம் புதிது என பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

பாரதிராஜா இயக்குனராக மட்டுமில்லாமல் குரங்கு பொம்மை, படைவீரன், சீதக்காதி, நம்ம வீட்டு பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம், ராக்கி, குற்றம் குற்றமே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா:

இந்த நிலையில் பாரதிராஜா உடல்நலமின்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்த செய்தியினைக் கேட்ட ரசிகர்கள் பாரதிராஜா உடல் நலம் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.