இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

லிங்குசாமி சினிமாவில் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் எனப் பல பணிகளைச் செய்து வருகிறார்.

லிங்குசாமி 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

முதல் படமே ஹிட்டான நிலையில் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை:

கடைசியாக இவர் தி வாரியார் என்ற திரைப்படத்தினை தெலுங்கு மொழியில் இயக்கி இருந்தார். மேலும் இவர் அவரின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களைத் தயாரிக்கவும் செய்து வருகின்றார்.

இந்தநிலையில் இவரும் இவரது சகோதரரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக செக் கொடுத்து கடன் வாங்கியுள்ளனர்.

கடனை திருப்பித் தராத காரணத்தால் செக்கினை கடன் கொடுத்தவர் பேங்கில் செலுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது நீதிமன்றத்தில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையானது வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றது.