தாய்கெழவின்னு கூப்பிடாதிங்க.. ரசிகர்களிடம் கோபத்தால் கொந்தளித்த நித்யா மேனன்!

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் டைட்டில் ரோலான திருச்சிற்றம்பலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த நித்யா மேனன்:

தனுஷின் சிறுவயது முதல் தற்போதுவரை தோழியாக இருப்பவர் நித்யா மேனன். காதல் தோல்வியால் தவிக்கும் தனுஷுக்கு அவரது தாத்தா பாரதிராஜா சிறு வயது முதல் தோழியாக இருக்கும் ஷோபனாவைக் காதலிக்க ஐடியா சொல்கிறார்.

அதன்பின்னர் சிறிது காலம் தயக்கத்துடன் தனுஷ் காதலிக்கிறார் தனுஷ். அதன்பின்னர்தான் நித்யா மேனன் சிறு வயதில் இருந்தே தனுஷைக் காதலித்து வருவது தெரிய வருகின்றது.

இந்தப் படத்தின் கதை முழுவதையும் சுமந்து நிற்கிறார் நடிகை நித்யா மேனன். இதுவரை நித்யா மேனன் நடித்த கதாபாத்திரங்களில் ரசிகர்களின் மனதில் நிற்கும் கதாபாத்திரமாக இதுவே உள்ளது.

இந்தப் படத்தின் தாய் கிழவி பாடலில் நித்யா மேனன் பாடி ஆடியிருப்பார், இந்தநிலையில் நித்யா மேனனை ரசிகர்கள் தாய்கெழவி என்றே அழைக்கத் துவங்கிவிட்டனர்.

நித்யா மேனன் சமீபத்தைய பங்க்சன் ஒன்றில் கலந்துகொள்ள ரசிகர்கள் அவரை தாய்கெழவி என்று அழைத்தனர். நித்யா மேனன் ரசிகர்களிடம் அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.