நயன்தாரா தங்கியிருக்கும் இடத்தின் ஒரு நாள் வாடகை இவ்வளவா? ஷாக்கில் உறைந்துபோன ரசிகர்கள்!

நயன்தாரா இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ2, காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கனெக்ட் போன்ற படங்கள் வெளியாகின.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் அப்டேட்:

நயன்தாரா திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நயன்தாரா திருமணத்திற்குப் பின் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்தில் நடித்துவருகிறார்.

தற்போது சினிமாவுக்குப் ப்ரேக் எடுத்து வழக்கம்போல் ட்ரிப் கிளம்பியுள்ளார். நயன் கணவர் விக்கியுடன் பார்சிலோனாவில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றார்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தற்போது ஜபேட் தீவில் பொழுதுபோக்கி வருகின்றனர். ஐபேட் தீவில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இவர்கள் தங்கியுள்ளனராம்.

இந்த விடுதியில் ஒரு நாள் தங்க வாடகையானது ரூ.54,000 ரூபாயாம். என்னது ஒரு நாளைக்கு வாடகையே ரூ.54000 ரூபாயா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியாகிப் போய் உள்ளனர்.

விக்னேஷ் சிவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா என்று ரசிகர்கள் சரமாரியாக கமெண்ட்டுகளால் தெறிக்கவிடுகின்றனர்.