பிலிம்பேர் மீது கேஸ் போடப் போறேன்.. தீயாய் பரவும் கங்கனாவின் போஸ்ட்!

கங்கனா ரணாவத் 2004 ஆம் ஆண்டு கேங்ஸ்டர் என்னும் இந்தித் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

தமிழில் இவர் தாம் தூம் என்ற திரைப்படத்திலும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் நடித்து இருந்தார் அடுத்து, இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிலிம்பேர் மீது கேஸ் போடப் போறேன்.. தீயாய் பரவும் கங்கனாவின் போஸ்ட்:

கங்கனா ரணாவத் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில், “2014 ஆம் ஆண்டு முதல் @filmfare போன்ற நெறிமுறையற்ற, ஊழல் மற்றும் முற்றிலும் நியாயமற்ற நடைமுறைகள் கொண்டதாக மாறிவிட்டது.

ஆனால் இந்த ஆண்டு எனக்கு தலைவி திரைப்படத்திற்காக விருது வழங்க விரும்புகிறார்கள். அவர்களின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்களிடமிருந்து பல அழைப்புகள் வந்தது.

அவர்கள் இன்னும் என்னை நாமினேட் செய்கிறார்கள் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்..

எப்படியும் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பது எனது கண்ணியம், பணி நெறிமுறைகள் மற்றும் மதிப்பு அமைப்புகளுக்குக் கீழே உள்ளது, அதனால்தான் @filmfare மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன்.. நன்றி” என்று கூறியுள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் கங்கனாவின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.