வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் ஜீ தமிழில் அர்ச்சனா!

அர்ச்சனா நம்ம வீட்டு கல்யாணம், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து அர்ச்சனா Old Is Gold, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, சூப்பர் டாடி என்ற நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கினார்.

அர்ச்சனா தனது மகள் சாராவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் சாராவும் அர்ச்சனாவும் இணைந்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

மீண்டும் ஜீ தமிழில் பிக் பாஸ் அர்ச்சனா:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார்.

இந்தநிலையில் அர்ச்சனா அவரின் சிக்னேச்சர் நிகழ்ச்சியான சூப்பர் மாம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஜீ தமிழ் சேனலில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

அர்ச்சனாவும்  சாராவும் சூப்பர் மாம் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்க, சூப்பர் மாம் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக குஷ்பு கலந்து கொள்ளவுள்ளார். மீண்டும் ஜீ தமிழில் அச்சுமா என்று ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.