மீண்டும் துவங்கிடுச்சு இந்தியன் 2 ஷுட்டிங்க்.. இயக்குனர் ஷங்கர் போட்ட போஸ்ட் இதோ!

ஷங்கர் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கத் திட்டமிட்டு, கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்தனர்.

அதன்படி 2019 ஆம் ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பானது துவங்கியது. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பானது நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி இந்த பிரச்சனையை தயாரிப்பாளர்- படக் குழுவினர் என இருதரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ளக் கோர, பேச்சுவார்த்தையில் சுமூகமாக முடிந்தது.

துவங்கிடுச்சு இந்தியன் 2 ஷுட்டிங்க்:

இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இந்தநிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து இயக்குனர் ஷங்கர் இன்ஸ்டாகிராமில், “அன்புள்ள இந்தியர்களே, இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! உங்கள் அனைவரின் ஆதரவும் வாழ்த்துகளும் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பானது நேற்று விசாகப்பட்டினத்தில் துவங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தியன் 2 படக் குழுவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.