கமல்ஹாசனின் விக்ரம் திரை விமர்சனம்!

விக்ரம் திரை விமர்சனம்:

போதைப்பொருள் தொழில் செய்யும் வில்லனாக விஜய் சேதுபதி உள்ளார், அவரிடம் கமல் ஹாசனின் மகனான காளிதாஸ் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்.

கெட்டவர்களிடம் போதைப் பொருள் கிடைக்ககூடாது என்று கருதி போதைப் பொருளை பதுக்கி வைக்கிறார். காளிதாஸ் போதைப்பொருளை பதுக்கி இருப்பதைக் கண்டறிந்து விஜய் சேதுபதி அவரைக் கொலை செய்கிறார்.

அதன்பின்னரும் விஜய் சேதுபதிக்கு சரக்கு கிடைக்காமல் போக வெறித்தனமாக தேடுகிறார். மற்றொருபுறம் தன் மகனை கொன்றதுக்காகவும் போதைப்பொருளை ஒழிக்க எண்ணியும் கமல்ஹாசன் தீவிரமாகக் களம் இறங்குகிறார்.

போதைப்பொருள் விவகாரம் சார்ந்த கொலைகளை குறித்து விசாரணை செய்யும் அதிகாரியாக பகத் பாசில் மறைமுகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் பகத் பாசில் போதைப்பொருள் கைப்பற்றினாரா, கமல் ஹாசனுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை..

கமல் பாசமான அப்பா, பேரன் மேல் கொள்ளைப் பிரியம் கொண்டு ஏங்கும் தாத்தா என நடிப்பு மொத்தத்தையும் இறக்கியுள்ளார். பகத் பாசில் படத்தின் மற்றொரு பக்க பலமாக உள்ளார். விஜய் சேதுபதி வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.

காயத்ரி, மைனா, சிவானி, மகேஷ்வரி ஆகியோர் தங்களது பங்கினை சிறப்புறச் செய்துள்ளனர்.

வழக்கம்போல் கடத்தல், கொலை என லோகேஷ் கனகராஜ் அதிரடியில் மிரட்டியுள்ளார். அனிருத் இசையில் பாடல்கள் மாஸ் ஹிட். ஒளிப்பதிவில் அதிரடி காட்டியுள்ளார் கிரீஸ் கங்காதரன்.