உறவுகளின் உன்னதம்.. கார்த்தியின் விருமன் திரை விமர்சனம்!

பிரகாஷ்ராஜ் தாசில்தாராக வேலைபார்த்து வருகிறார். இவரின் மனைவி சரண்யா பொன்வண்ணன். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் கடைசி மகனாக கார்த்தி உள்ளார். கார்த்தி தன் மாமாவின் பராமரிப்பில்தான் சிறுவயதில் இருந்தே வளர்கிறார்.

தன்னுடைய தாய் சரண்யா பொன்வண்ணன் இறந்தவருக்கு பிரகாஷ்ராஜ் காரணம் என்பதால் தந்தையைக் கொலை செய்ய நினைக்கிறார் கார்த்தி.  

மறுபுறம் பிரகாஷ் ராரோ எப்படியாவது கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் பெயரில் உள்ள சொத்தைக் கைப்பற்ற ப்ளான் போடுகிறார்.

தன்னுடைய மூன்று அண்ணன்களுக்கும் அப்பாவிற்கும் உறவுகள் குறித்த முக்கியத்துவத்தை உணர வைக்க பல முயற்சிகள் செய்கிறார் கார்த்தி.

இறுதியில் கார்த்தி அப்பா பிரகாஷ் ராஜ் மற்றும் அண்ணன்களுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கார்த்தி கிராமத்து இளைஞனாக வாழ்ந்தேவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காதல், பாசம், ஆக்சன் என அனைத்தும் கலந்த கலவையாக உள்ளார்.

ப்ரகாஷ்ராஜ் வில்லத்தனத்தில் அசத்தியுள்ளார். பாசத்தால் உருக வைத்துள்ளார் ராஜ் கிரண். சூரியின் காமெடி வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றது, உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார் இயக்குனர் முத்தையா.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைவரும் முணுமுணுக்கக் கூடியதாக உள்ளது. செல்வக் குமாரின் ஒளிப்பதிவு மாஸ்.