தங்க சுரங்கத்தின் மீதான ஆதிக்கம் நீடித்ததா கே.ஜி.எஃப் 2 திரை விமர்சனம்!

கே.ஜி.எஃப் 2 படத்தினை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கே.ஜி.எஃப்பைக் கைப்பற்றிய யஷ் அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் யஷ்.

அடுத்து கே.ஜி.எஃப்பை தங்களது கட்டுக்குள் கோண்டுவர எண்ணிய சிலர் யஷ்ஷை கொலை செய்ய நினைக்கின்றனர்.

அதேபோல் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சஞ்சய் தத் மீண்டும் கே.ஜி.எஃப்.பைக் கைப்பற்ற நினைத்து படைகளுடன் போரிடுகிறார்.

இறுதியில் யஷ் கே.ஜி.எஃப்பை எப்படிக் கைப்பற்றினார் என்பதே மீதமுள்ள கதையாகும். கே.ஜி.எஃப் முதல் பாகம்போல் யஷ் திரைப்படத்தின் அனைத்து அங்கமாய் உள்ளார்.

ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி தன்னுடைய பங்கினைச் சிறப்பாக செய்து இருக்கிறார். சஞ்சய் தத் வில்லத்தனத்தில் அசத்தியுள்ளார். முதல் பாகத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் இரண்டாம் பாகம் செம மாஸாக உள்ளது.

விறுவிறுப்பு, மாஸ் மற்றும் பிரம்மாண்டம் என்ற மூன்று வார்த்தைகளை உள்ளடக்கியதாக உள்ளது கே.ஜி.எஃப் 2. ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் சூப்பர்.  புவன் கவுடாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.