ரோபோவை மகனாகப் பார்க்கும் கே.எஸ்.ரவிக்குமார். கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்..

கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியா, தர்ஷன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா. தமிழகத்தின் கோயமுத்தூரில் உள்ள கிராமத்தில் வசித்துவரும் தந்தைதான் கே.எஸ்.ரவிக்குமார்.

அவரின் மகனான தர்ஷன் இஞ்சினியரிங் படித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்பட, கே.எஸ்.ரவிக்குமார் நோ சொல்கிறார். அதன்பின் தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் சென்ற தர்ஷன், தந்தையின் தனிமையைப் போக்க தன் நிறுவனத்தின் பரிசோதனையில் உள்ள ஒரு ரோபோவை கொடுக்கிறார்.

ரோபோமீது துவக்கத்தி கடுப்பில் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அதன்பின்னர் அதன்மீது பாசம் கொள்கிறார். பரிசோதனைக்குபின் ரோபோவை நிறுவன முதலாளி திரும்ப கேட்க கே.எஸ்.ரவிக்குமார் பாசத்தால் திருப்பி கொடுக்காமல் உள்ளார்.

இதனால் தர்ஷன் ரோபோவைக் கொண்டு செல்ல இந்தியா வருகிறார். ரோபோ கே.எஸ். ரவிக்குமாருடன் இருந்ததா? இல்லையா என்பதுதான் மீதிக் கதையாகும்.

கே.எஸ்.ரவிக்குமார் படம் முழுவதும் பயணிக்கிறார், தர்ஷன் தனக்கான வேலையைச் செய்ய, லாஸ்லியா அவ்வப்போது வந்து போகிறார்.

யோகிபாபுவின் காமெடி சிரிக்க வைக்கவில்லை. ஜிப்ரானின் இசை கூடுதல் பலம். கிராமத்து அழகை கண்முன்னே கொண்டு வந்த அர்வியின் ஒளிப்பதிவு வாவ்.