நடுத்தர குடும்பத்து அப்பா.. விஜய் சேதுபதியின் மாமனிதன் திரை விமர்சனம்!

தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில் வசிப்பவர் விஜய் சேதுபதி, இவர் தன்னுடைய மனைவி காயத்ரி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

ஆட்டோ ஓட்டுவதைத் தன் சொந்தத் தொழிலாகக் கொண்டுள்ளார். விஜய் சேதுபதி தன்னுடைய குழந்தைகளை மிகப் பெரிய ஸ்கூலில் படிக்க வேண்டும் என்று கனவு கொண்டு அதிக பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

அப்போது ஆட்டோ ஓட்டும் தொழிலால் அதிகம் சம்பாதிக்க முடியாது என்ற முடிவெடுத்து ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையினைச் செய்ய நினைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பண்ணைபுர கிராம மக்கள் முதலீடு செய்ய ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலைத் துவக்குகிறார். இந்தநிலையில் நிலத்தை பதிவு செய்யும்போது ரியல் எஸ்டேட் அதிபர் ஏமாற்றி ஊரை விட்டுச் செல்கிறார்.

இதனால் ஊர் மக்கள் விஜய் சேதுபதியை போலீசில் மாட்டிவிட குடும்பத்தைவிட்டு ஓடிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். போலீசில் பிரச்சினையில் இருந்து மீண்டும் விஜய் சேதுபதி குடும்பத்துடன் சேர்ந்தாரா என்பதுதான் மீதிக்கதை.

விஜய் சேதுபதி மிடில் கிளாஸ் வீட்டு கணவன் – அப்பா என தன்னுடைய ரோலால் அனைவரையும் நெகிழச் செய்துவிட்டார்.

காயத்ரி ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாக கணவர் – பிள்ளைகள் மீது பாசம் கொண்ட கதாபாத்திரத்தில் செமயாக ஸ்கோர் செய்துள்ளார்.

வழக்கம்போல் எதார்த்தமான வாழ்க்கையினை கண்முன்னே தனக்கே உரிய பாணியில் திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

திரைக்கதை கொஞ்சம் விறுவிறுவென இருந்திருக்கலாம். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் வேற லெவல்.. சுகுமாரியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மெருகூட்டிக் காட்டுகின்றது.