மாதவனின் நம்பி விளைவு.. திரை விமர்சனம் இதோ!

ராக்கெட் சார்ந்த பணியினைச் செய்வதை ஆசையாகக் கொண்டுள்ளார் நம்பி நாரயணன். இவர் பள்ளிப் படிப்பினை இந்தியாவில் முடித்துவிட்டு அடுத்து அமெரிக்கா படிக்கச் செல்கிறார்.

உலகின் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ராக்கெட் சார்ந்த படிப்பினை படிக்கச் செய்கிறார் நம்பி நாராயணன்.

அதன்பின்னர் தன்னுடைய ஆராய்ச்சிப் பணியை செய்கிறார். அதன் பின்னர் நம்பி சாருக்கு அமெரிக்காவின் நாசாவில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் அதை வேண்டாம் என்று கூறி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் வேலை பெறுகிறார். இந்த நிலையில் நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கு பதிவாகி அவர் கைது செய்யப்படுகிறார்.

அதனைத் தொடர்ந்து அவர் எவ்வாறு தன் பக்க நியாயத்தில் வென்றார் படத்தின் மீதிக் கதை. நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்கு 110 சதவீதம் மாதவன் பொருந்திவிட்டார்.

சிம்ரன் தன்னுடைய கதாபாத்திரத்தால் ரசிகர்களின் மனதினை உலுக்கிவிட்டார். சூர்யா கேமியோ ரோலில் வந்து மனதில் பதிந்து விட்டு சென்று விட்டார்.

சிர்ஷா ரேவின் ஒளிப்பதிவு வேற லெவல்.. சாம் சிஎஸ் பிண்ணனி இசையால் நெருடிவிட்டார்.