மகன் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடும் மைனா நந்தினி..!

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நந்தினிக்கு அவர் நடித்த மைனா கதாபாத்திரமே பெயராகிப் போனது.

மைனா நந்தினி 2019 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் யோகேஷைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் என்ற மகன் உள்ளார்.

அதுமட்டுமல்லாது நந்தினி விஜய் தொலைக்காட்சியின் பேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்றார்.

மேலும் மைனா விங்க்ஸ் என்ற யூடியூப் சேனலைத் துவக்கி ஷூட்டிங்க் இல்லாத காலகட்டங்களில் வீடியோக்கள் பதிவிட்டும் வருகிறார்.

சிங்கப்பூரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மைனா நந்தினி – யோகேஷ் ஜோடி:

மைனா நந்தினி கடைசியாக விக்ரம் மற்றும் விருமன் படங்களில் நடித்து இருந்தார். மைனா நந்தினி- யோகேஷ் ஜோடி தங்கள் மகன் துருவ் பிறந்தநாளைக் கொண்டாட சிங்கப்பூர் போய் உள்ளனர்.

மைனா நந்தினி, யோகேஷ், துருவ், மைனாவின் அப்பா என நால்வரும் சிங்கப்பூரில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றது.