மெடிக்கல் மார்ஃபியா.. தி லெஜெண்ட் மூவி திரை விமர்சனம்!

தி லெஜண்ட் சரவணன் – ஊர்வசி ரவ்துலா நடிப்பில் இயக்குனர் ஜேடி- ஜெஃப்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தி லெஜெண்ட்.

சரவணன் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார், இவர் அறிவியல் பூர்வமாக செய்யும் சாதனைகள் உலகநாடுகள் மத்தியில் இவருக்குப் புகழைச் சேர்க்கின்றது.

சொந்த ஊருக்கு வந்து சேவை செய்ய நினைத்து தாத்தாவின் கல்லூரியை எடுத்து நடத்துகிறார். இந்தநிலையில் சரவணனின் க்ளோஸ் ஃப்ரண்டான ரோபோ சங்கர் சர்க்கரை நோயால் இறந்து விட, சரவணன் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

சரவணன் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்குப் பல தடைகள் வர, சரவணன் பிரச்சனைகளை கடந்து சர்க்கரை நோய்க்கு எவ்வாறு மருந்து கண்டுபிடித்தார்  என்பதே படத்தின் மீதிக் கதை.

சரவணன் முதல் படம் என்றிராத அளவில் ரொமான்ஸ், ஆக்சன், சென்டிமென்ட் என சும்மா தாறுமாறு பண்ணிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கீத்திகா திவாரி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளார். ஊர்வசி ரவ்துலா, சுமன் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர். ரோபோ சங்கர், பிரபு, விஜயகுமார் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பு பாராட்டும்படியாக அமைந்துள்ளது.

விவேக் மற்றும் யோகி பாபுவின் நகைச்சுவைக்கு க்ளாப்ஸ். ஜேடி – ஜெரி வழக்கமான கதையாக இருந்தாலும் திரைக்கதையில் தங்களின் தனித்துவத்தைக் கொடுத்து அசத்தியுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை படத்திற்கு கூடுதல் பலம். வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிக்கு கூடுதல் மெருகூட்டியுள்ளது.