ஆல்யா பட் – ரன்பீர் கபூர் பெண் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு… இதான் பெயராம்!

இந்தி சினிமாவில் பல ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக இருந்து வருவ்ர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆல்யாபட். இவர்கள் இருவரும் பல ஆண்டு கால காதல் வாழ்க்கையை ஏப்ரல் மாதம் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் ஆல்யா பட் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் ஆல்யா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவின் குழந்தைக்கு தற்போது பெயரிட்டுள்ளனர்.

ஆல்யா பட் – ரன்பீர் கபூர் பெண் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு:

குழந்தைக்கு ரஹா என்று பெயரிட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஆல்யாபட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆல்யாபட் அவரின் இன்ஸ்டா பதிவில், “ரஹா என்ற பெயருக்கு பல அழகான அர்த்தங்கள் உள்ளன… ரஹா, தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்று பொருள்

சுவாஹிலியில் அவள் ஜாய், வங்களாத்தில் – ஓய்வு, ஆறுதல், நிவாரணம், அரபு அமைதியில், இது மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் பொருள்படும்.

அவளுடைய பெயருக்கு உண்மையாக, நாங்கள் அவளை பிடித்த முதல் கணத்தில் இருந்து – நாங்கள் அதை உணர்ந்தோம்! ❤️ நன்றி ரஹா, எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு, எங்கள் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது போல் உணர்கிறேன்“ என்று பதிவிட்டுள்ளார்.