கோலாகலமாக நடைபெற்ற நமீதா குழந்தைகளின் பெயர் சூட்டு விழா பங்க்சன்!!

நமீதா வீரேந்திரா என்பவரை நவம்பர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நமீதா இரட்டைக் குழந்தைகளுடன் கிருஷ்ணர் கோவில் ஒன்றிற்கு சென்று இருந்தார். வழிபாடு முடித்த பின் தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்தார்.

நமீதா குழந்தைகளின் பெயர் சூட்டு விழா:

இந்தநிலையில் நமீதா தன்னுடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டு விழாவானது நடைபெற்றுள்ளது. அதாவது மகன்களுக்கு பெயர் சூட்டு விழாவினை சொந்த ஊரான சூரத்தில் செய்துள்ளார் நமீதா. குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் பெயர்களைச் சூட்டியுள்ளார்.

குழந்தைகளின் பெயர் சூட்டு விழா குறித்து நமீதா இன்ஸ்டாகிராமில், “’கிருஷ்ணா ஆதித்யா’ மற்றும் ‘கியான் ராஜ்’ ஆகியோரை சந்திக்கவும் !!

என் கிருஷ்ணனால் எனக்கு பரிசளிக்கப்பட்ட எனது இரண்டு அழகான சிறிய அற்புதங்கள் !! என் விலைமதிப்பற்ற பரிசு! அதனால், கிருஷ்ணாவுக்கு என் குழந்தைகளுக்கு அவரின் பெயர் வைப்பேன் என்று உறுதியளித்தேன். எனது நன்றியறிதலையும் பாராட்டுதலையும் காட்டுவதற்கான எனது வழி!

நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்! பெயரிடும் விழா சூரத்தில் (எனது சொந்த ஊர்), நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் நடைபெறுகின்றது. உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.