புதுத் தாலியைக் கழட்டாமல் ஜவான் படத்தில் நடிக்கும் நயன்தாரா.. அட்லி என்ன செஞ்சிருக்கார் தெரியுமா!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரம் பீச்சில் உள்ள ரெசார்ட் ஒன்றில் நடைபெற்றது. திருமணத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி தம்பதி சகிதமாக திருப்பதி சென்றனர்

ஜவான் படத்தில் நயன்தாரா :

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி மறுவீட்டுக்காக கேரளாவில் உள்ள நயன்தாராவின் அம்மா வீட்டிற்குச் சென்றனர். கேரளாவில் அவர்கள் திருவுல்லாவில்தான் தங்கினர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ஹனிமூன் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியது. அதாவது நயன்தாரா தன் காதல் கணவருடன் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றனர்.

இந்தநிலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து நயன்தாரா,விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த வாரம் இந்தியா வந்து சேர்ந்தனர். இந்தியா திரும்பிய நயன்தாரா மும்பையில் உள்ள ஜவான் திரைப்படத்தின் ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் இன்னும் நயன்தாராவுக்கு தாலி பெருக்கிக் கோர்த்தல் பங்க்சன் நடைபெறாமல் உள்ளது. இதனால் தாலியை சென்டிமென்டாக கழட்டாத நயன்தாரா தாலியுடன்தான் ஜவான் ஷுட்டிங்கில் நடித்து வருகிறார்ம்.

நயன்தாராவின் சென்டிமெண்ட்டுக்கு ஏற்ப அட்லியும் தற்போது குடும்ப காட்சியினை படமாக்கி வருகிறாராம்.