சாதியக் கொடுமைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் நெஞ்சுக்கு நீதி திரை விமர்சனம்!

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும்,  தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி திரைப்படமாகும்.

நெஞ்சுக்கு நீதி திரை விமர்சனம்:

ஐபிஎஸ் அதிகாரியான உதயநிதி ஸ்டாலின் சாதியக் கொடுமைகள் அதிகமாக உள்ள ஒரு ஊரில் வேலைக்கு பணியமர்த்தம் செய்யப்படுகின்றார்.

அந்த ஊரில் இரண்டு இளம் பெண்கள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டும், ஒரு பெண் காணாமல் போகவும் செய்கிறார்.

இதனை விசாரிக்கும் முயற்சியில் ஈடுபடும் உதயநிதி எப்படிக் காணாமல் போன பெண்ணையும் உதயநிதியையும் கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

உதயநிதி விஜயராகவன் என்ற கதாபாத்திரத்தை அப்படியே உள் வாங்கி நடித்துள்ளார். தன்யா ரவிச்சந்திரன் தனக்கான பங்கினை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

ஆரி குமரன் என்ற கதாபாத்திரத்தை அழகுற நடித்துள்ளார், காவல் ஆய்வாளர் சுரேஷ் சக்ரவரத்தி வில்லன் கதாபாத்திரத்திற்கு மெருகூற்றி உள்ளார்.

ஆர்டிக்கிள் 15 படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் காட்சிகளை சேர்த்து படமாக்கி இருப்பதால் அருண்ராஜா காமராஜ் பாராட்டினைப் பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் திபு நினன் பின்னணி இசையில் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திரைக்கதையினை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றது.