ஒற்றைக் காலுடன் மகளைக் காப்பாற்றப் போராடும் அப்பா.. பொய்க்கால் குதிரை திரை விமர்சனம்!

பிரபுதேவா எதிர்பாராத விபத்து ஒன்றில் மனைவியை இழக்கிறார். மேலும் பிரபுதேவாவுக்கு இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதி விபத்தில் வெட்டுப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து பிரபுதேவா தனக்குக் கிடைக்கும் காப்புறுதி நிவாரணப் பணத்தில் தன்னுடைய ஒரே மகளுடன் வாழ்கிறார்.

பிரபுதேவா மகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க ஆசை கொள்கிறார். மற்றொருபுறம் அவரின் மகள் அப்பாவுக்கு செயற்கைக் கால் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் போராடி சம்மதிக்க வைக்கிறாள்.

ஒருவழியாக செயற்கைக் கால் வந்து விடுகின்றது, அதனைத் தொடர்ந்து மகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நோய் இருப்பது தெரியவருகின்றது.

மகளை எப்படியும் காப்பாற்ற நினைக்கிறார், மருத்துவச் செலவு பல லட்சம் என்ற நிலையில் பிரபு தேவா தொழில் அதிபரின் மகளை கடத்தி  பணம் சம்பாதிக்க ப்ளான் போடுகையில், மற்றொருபுறம் குழந்தையை வேறொருவர் கடத்த பிரபு தேவா மாட்டிக் கொள்கிறார்.

கடத்தல் பிரச்சனையில் இருந்து பிரபுதேவா எவ்வாறு மீண்டார்,  தன் மகளின் உடல்நிலை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரபுதேவா சென்டிமெண்ட் காட்சிகளில் நம்மையே அழ வைத்துவிடுகிரார். சிறுமி ஆழியா தன்னுடைய அழகான நடிப்பால் நம்மை கட்டி இழுக்கிறார்.

இமான் இசையில் பாடல்கள் சூப்பர். பல்லுவின் ஒளிப்பதிவுக்கு கைதட்டல். இயக்குனர் சந்தோஷ் ப்ரதாப் குழந்தைகள் கடத்தல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார்.