சோழ வம்சத்தைக் கண்முன்னே கொண்டுவந்த பொன்னியின் செல்வன் திரை விமர்சனம்!

சோழ மன்னன் சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன் என்று மூன்று வாரிசுகள். ஆதித்த கரிகாலன் நண்பன் வந்தியத்தேவனுடன் இணைந்து இராஷ்டிரகூடர்களுக்கு எதிராக போரிட்டு வெற்றி கொள்கிறார்.

அதன்பின் சோழ நாட்டிற்கும் நடக்கவுள்ள சதியினை அறிந்துகொண்டு வந்தியத்தேவன்மூலம் தஞ்சைக்கு செய்தியை அனுப்ப ஒற்றனாக அனுப்புகிறார்.

வந்தியத்தேவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சுந்தர சோழருக்கு பின் மதுராந்தகன் அரசனாக வேண்டும் என்று பெரிய பழுவேட்டரையறுடன் சதி திட்டம் தீட்டும் சம்பவம் அரங்கேறுகின்றது.

இதை வந்தியத்தேவன் ஒருபுறமும் ஆழ்வார்கடியான் மற்றொருபுறமும் ஒளிந்திருந்து பார்க்கின்றனர். வந்தியத்தேவன் வழியில் நந்தினியை சந்திக்கிறார். சுந்தர சோழரை சந்தித்து சோழ குலத்திற்கு இழைக்கப்படவுள்ள ஆபத்து குறித்துக் கூறுகிறார்.

அதன்பின் குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன் காதல் கொள்கிறான்.

குந்தவை காதலில் விழுந்ததுடன், தம்பி அருண்மொழி வர்மனை இலங்கையில் இருந்து தஞ்சைக்கு அழைத்து வரும்படி கூறுகிறார் குந்தவை.

காதலிக்காக இலங்கைக்கு செல்லும் வந்தியத்தேவன் அருண்மொழி வர்மனை சந்திக்கிறார். அந்த நேரத்தில் பாண்டிய நாட்டினைச் சார்ந்த சிலர் ஆதித்த கரிகாலன், அருள் மொழி வர்மன், சுந்தரச்சோழரை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர்.

வந்தியத்தேவனுக்கும் அருண்மொழி வர்மனுக்கும் நடந்தது என்ன என்பதே முதல் பாகத்தின் மீதிக் கதை. 

இயக்குனர் மணி ரத்னத்தின் காவியத்தை கண்முன்னே படைத்துவிட்டார். ஆதித்த கரிகாலனாக விக்ரம் மிரட்டிவிட்டார்.

வந்தியதேவனாக வரும் கார்த்தி காதல் மன்னனாக அசத்திவிட்டார். நந்தினியாக ஐஸ்வர்யா ராய் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார்.

கம்பீரம், ஆளுமை, அழகு என த்ரிஷா அனைவர் மனதையும் கொள்ளை அடித்துவிட்டார்.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், ஆழ்வார்கடியானாக ஜெயராம், சமுத்திரகுமாரி பூங்குகளியாக ஐஸ்வர்யா லட்சுமி, .  ரவிதாசனாக கிஷோர், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழர் பிரகாஷ் ராஜ், பெரிய வேளாளர் பிரபு, மலையமானாக லால், வானதியாக சோபிதா, பார்திப்பேந்திரா பல்லவராக விக்ரம் பிரபு, மதுராந்தகனாக வரும் ரஹ்மான் என அனைவரும் கதாபாத்திரத்தில் பொருந்திவிட்டனர்.

ரவி வர்மனின் ஒளிப்பதிவுக்கு 100 மார்க். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் வேற லெவல்.

ஏ.ஆர். ரஹ்மான். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.