533 எபிசோடுகளுடன் முடிவடைந்த புது புது அர்த்தங்கள் சீரியல்..!

ஜீ தமிழில் புது புது அர்த்தங்கள் சீரியலில் இல்லத்தரசியாக இருக்கும் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் தேவயானி இல்லத்தரசிகளின் பேவரைட் என்றே சொல்லலாம்.

லட்சுமிக்குத் துணையாக அவரது மருமகள் பார்வதி இருக்கிறார். மாமியார்- மருமகள் இடையேயான உறவு குறித்தும் சிறப்பாக எடுத்துரைக்கிறது புது புது அர்த்தங்கள்.

இந்த சீரியலானது இந்த ஆண்டு 22 ஆம் தேதி மார்ச் முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. 300 வது எபிசோடுகளை நெருங்கவுள்ள இந்த சீரியல் ஹிட் சீரியல் என்ற இடத்தினைப் பிடித்துள்ளது.

புது புது அர்த்தங்கள் சீரியலின் எண்ட் கார்டு:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இல்லத்தரசி சீரியலான பாக்யலட்சுமி சீரியலுக்கு செம டஃப் கொடுத்துவந்த புது புது அர்த்தங்கள் சீரியல் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தமாக 533 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த சீரியல் முடிவடைந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஹரி சாருக்கும் லட்சுமி அம்மாவுக்கும் திருமணம் நடந்ததுபோல் காட்டி முடித்ததால் பலரும் எப்படியோ ஹரி சார் லட்சுமி அம்மாவுக்கு திருமணம் ஆச்சே என்று கூறி வருகின்றனர்.