ஆசிரியர்- மாணவர் இடையேயான பிரச்சினை.. டான் திரை விமர்சனம்!

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும் நடிக்க வெளியாகியுள்ள திரைப்படம் டான். சமுத்திரக்கனி மகன் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து மகன் சிவகார்த்திகேயனை அதிகம் படிக்க வைக்க நினைக்கிறார்.

மற்றொருபுறம் சிவகார்த்திகேயனோ பெரிய ஆள் ஆக வேண்டும், ஆனால் படிக்காமல் பெரிய ஆள் ஆக வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளார்.

இன்ஜினியரிங் காலேஜில் சேரும் சிவகார்த்திகேயன், அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிவுடன் சில பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்.

எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரியினை வாங்கக் கூடாது என்று திட்டம் தீட்டுகிறார். இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் சதிகளை முறியடித்து சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரியினை எப்படி வாங்கினார் என்பதே கதையாகும்.

சிவகார்த்திகேயன் கல்லூரிப் பையனாக துறுதுறுவென்று இருக்கிறார், ப்ரியங்கா மோகன் தன்னுடைய கொள்ளை அழகால் ரசிகர்களைக் கவர்கிறார்.

சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா இடையேயான சீன்கள் தாறுமாறு தக்காளி சோறுதான். ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் தங்களது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

முதல் திரைப்படத்திலேயே இயக்குனர் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதையினைக் கொடுத்துவிட்டார். மேலும் அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் திரைக்கதையினைச் சிறப்பாக நகர்த்தியுள்ளார்.