சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரை விமர்சனம்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

வடநாடு தென்னாடு என்ற இரண்டு ஊர் மக்கள் பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் வாழ்ந்து வருகின்றனர்.

தென்னாட்டில் சூர்யா தந்தை சத்யராஜ்- தாய் சரண்யாவுடன் வாழ்ந்து வருகிறார். வழக்கறிஞராக இருந்துவரும் சூர்யா ஊரில் பெண்கள் கொலை செய்யப்படுவதையும் மற்றும் தற்கொலையும் அறிந்து அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறார்.

அப்போது நடக்கும் சம்பவங்களுக்குக் காரணம் வில்லன் வினய் என்பதைத் தெரிந்து கொள்கிறார்.

அதாவது பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு வினய் அப்பகுதி பெண்களை வீடியோ எடுப்பதும் மிரட்டுவதுமாக கதை நகர்கின்றது.

சூர்யா ப்ரியங்கா மோகனனைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்.

தேவதர்ஷனி, சூரி, புகழ் நகைச்சுவையில் பின்னி எடுத்துள்ளனர்.

பாண்டிராஜ் தன்னுடைய பாணியில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் மிரட்டல்களை மையமாக வைத்து குடும்பப் படம் ஒன்றினை இயக்கியுள்ளார்.

இமான் இசையில் பாடல்கள் மட்டுமல்லாது படத்திற்கும் பக்கபலம். ரத்தினவேலு கிராமத்து அழகினை அழகாகப் படம் பிடித்துள்ளார்.