தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மாமியாரின் பாசத்தை எப்படியாவது பெற வேண்டும் என்று எண்ணி சரஸ்வதி 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்.
தமிழும் சரஸ்வதியும் சீரியல் அம்மா செய்ற வேலையைப் பாருங்க:
அடுத்து சரஸ்வதி ஒருவழியாகப் பிளான் போட்டு கிச்சனில் சமைத்து விடுகிறார். இப்படி சென்று கொண்டிருக்கையில் சரஸ்வதியின் அப்பா சரஸ்வதியைக் காண வர, கார்த்தி அவரை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து குடும்பத்தாரின் அனுமதியின்றி பிடிவாதமாக அப்பாவைப் பார்க்க வருகிறார் சரஸ்வதி. கோதை மீண்டும் தமிழ் – சரஸ்வதி மீது கடும் கோபத்தில் இருக்கிறார், அடுத்து என்ன நடக்குமோ என்பதுபோல் கதை நகர்கின்றது.
இந்தநிலையில் கோதை கதாபாத்திரத்தில் நடித்துவரும் மீரா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றினைப் போஸ்ட் செய்துள்ளார். அதாவது மீரா கிருஷ்ணன் வீடியோவில் ஹேர்கட் செய்து மாடர்னாக ட்ரெஸ் அணிந்து நடனம் ஆடியுள்ளார்.
மேலும் அவர் கேப்ஷனாக, “மாற்றம் முதலில் கடினம்
நடுவில் குழப்பம்
மற்றும் இறுதியில் அருமை.” என்று பதிவிட்டுள்ளார்.
மீரா கிருஷ்ணனின் இந்த லுக் செமயாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி, லைக்குகளைக் குவித்து வருகின்றனர். மீரா கிருஷ்ணனுக்கு வயது 36 தான், ஆனால் இவர் பல சீரியல்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.