இளம் நடிகையை படக் குழுவினர் முன்னிலையில் திட்டி அழ வைத்த இயக்குனர்!

விஜய் சேதுபதி தெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் கடைசியாக வில்லனாக நடித்து இருந்தார்.  இந்த திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியானது. புதுமுக ஹீரோ, ஹீரோயின்களான வைஷ்ணவ் தேவ் மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். முதல் திரைப்படத்திலேயே தெலுங்கு ரசிகர்களின் மனதினைக் கொள்ளை அடித்தார் கீர்த்தி.

உப்பென்னா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உலக அளவில் உப்பென்னா திரைப்படம் 120 கோடி ரூபாயினைத் தாண்டி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. உப்பென்னா படத்திற்குப் பின்னர் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார் கீர்த்தி ஷெட்டி.

தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்று வரும் நிலையில், இன்று அந்தப் படத்தில் சோகமான காட்சி படமாக்கப்பட, அந்த காட்சியில் கீர்த்தி பல டேக்குகளை வாங்கியுள்ளார்.

பல டேக்குகளுக்குப் பின்னரும் லிங்குசாமி எதிர்பார்த்த அளவு கீர்த்தி நடிக்காததால் படக் குழுவினர் மத்தியில் லிங்குசாமி கீர்த்தியை கத்தித் திட்டியுள்ளார்.

அனைவர் முன்னிலையிலும் கத்தியதை அடுத்து கீர்த்தி அழுது கொண்டே கேரவனுக்கு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.