இன்னும் பத்தே நாளில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் லாஞ்ச்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கான் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு ப்ரமோக்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிக் பாஸ் 6 நிகச்சியில் மிகச் சாதாரண மனிதர்களும் கலந்து கொள்ளவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் லாஞ்ச்:

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகிய வண்ணமே உள்ளது. இந்தநிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த ஒரு ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதாவது பிக் பாஸ் 6 நிகழ்ச்சியானது அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்குத் துவங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் இரவு 9.30 மணி 10.30 மணி வரை ஒளிபரப்பாகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் லாஞ்ச் குறித்து ரசிகர்கள் கடும் ஆவலில் உள்ளனர்.