நகைக்கடை கொள்ளையால் பாதிக்கப்படும் சாதாரண மனிதனின் வாழ்க்கை.. எண்ணித் துணிக திரை விமர்சனம்!

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அதுல்யா இருவரும் காதலித்து வந்தநிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் சொல்கின்றனர். இதனையடுத்து ஜெய் மற்றும் அதுல்யாவின் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

அப்போது தன் குடும்பத்துடன் திருமணத்திற்கு நகை வாங்க நகைக்கடை ஒன்றிற்கு செல்கிறார் அதுல்யா. அப்போது அந்த நகைக்கடையில் கொள்ளைக் காரர்கள் 2000 கோடி வைரத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

அதாவது நகைக்கடையில் உள்ள 2000 கோடி வைரத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் நான்கு பேருடன் இணைந்து பிளான் போட்டு களம் இறங்குகிறார் வம்சி கிருஷ்ணா.

கொள்ளையடிக்கும் பணத்தை ஐந்து பேரும் பங்கு போட்டு கொண்டு, வைரத்தை வில்லனிடம் ஒப்படைக்கலாம் என்பதே அவர்களின் ப்ளான்.

கொள்ளையடிக்கும் போது அதுல்யாவை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகின்றனர். அதுல்யாவை கொலை செய்தவர்களை காவல் துறையின் உதவியுடன் ஜெய் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதி கதை.  

நகைக்கடையில் நடக்கும் கொள்ளை ஜெய் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏர்படுத்துகின்றது என்பதே கதையாகும். விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இயக்குனர் வெற்றிச்செல்வன் படத்தினைக் கொடுத்துள்ளார்.

ஜெய் முதல் முறையாக இந்தப்படத்தின் மூலம் ஆக்‌ஷனை கையில் எடுத்துள்ளார். அதுல்யா தனக்கான கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். வம்சி மற்றும் சுரேஷ் சுப்ரமணியன் வில்லத்தனத்தில் அசத்தியுள்ளனர்.

தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளுக்கு கூடுதல் பலம். சாம் சி எஸ். இசையில் பாடல்கள் அசத்தல்.