கணவர் இறந்தபின் மீனா வீட்டில் நடந்துள்ள விசேஷம்.. எப்பவும் இப்படியே இருங்கனு வாழ்த்தும் ரசிகர்கள்!

மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இஞ்சினியரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

நைனிகா விஜய் – சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் மீனா கடைசியாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

மீனாவின் 46 வது பர்த்டே செலபரேஷன்:

இந்தநிலையில் சமீபத்தில் மீனாவின் கணவருக்கு நுரையீரல் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி வித்யாசாகர் உயிர் இழந்தார்.

வித்யாசாகர் உயிர் இழந்த பின் வீட்டைவிட்டு வெளிவராத மீனாவை நடிகைகள் ரம்பா, சங்கவி, சங்கீதா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் மீனாவின் 46வது பிறந்த நாள் நேற்று, மீனாவை மகிழ்ச்சிப் படுத்த நினைத்த நடிகை சினேகாவின் அக்கா சங்கீதா ஹோட்டலில் பர்த்டே செலபரேஷனுக்கு ரெடி செய்துள்ளார்.

மீனா கேக் வெட்டி மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ரசிகர்கள் எப்பவும் நீங்க ஹேப்பியா இருக்கணும் என்று வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.