தனுஷ் மகன் கேப்டன்.. இந்த நடிகரின் மகள் துணை கேப்டன்.. வைரலாகும் போட்டோ இதோ!

தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் தங்களது விவாகரத்தினை 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.

ஐஸ்வர்யா – தனுஷ் மகன்களான லிங்கா, யாத்ரா இருவரும் அம்மாவுடன்தான் வசித்து வருகிறார்கள். இருப்பினும் அப்பா தனுஷை அவ்வப்போது சென்று பார்த்து வருகின்றனர்.

பள்ளி விளையாட்டுப் போட்டியின் கேப்டனாக யாத்ரா – அர்னா:

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தங்களின் பெரிய மகன் யாத்ராவின் பள்ளி விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

அதாவது யாத்ரா பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவியேற்றதைக் காண தனுஷ் – ஐஸ்வர்யா சென்றனர்.

மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மகன்களுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியது.

தற்போது தனுஷ் மகன் மட்டுமல்லாது மற்றொரு நடிகரின் மகளும் கேப்டனாகி உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது யாத்ரா சீனியர் விளையாட்டு அணியின் கேப்டன் ஆகியுள்ளார்.

அவருடன் நடிகர் அஸ்வின் சேகரின் மகளான அர்னா சேகர் ஜுனியர் அணிக்கு கேப்டனாகி உள்ளார். இதுகுறித்து அர்னாவின் தாத்தா எஸ்.வி சேகர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.