தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய், இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படமானது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இவருக்கு தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு.
தற்போது அவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பெயரிடப்படாத தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தளபதி 48 வது பர்த்டே:
தற்போது நடிகர் விஜயின் பிறந்தநாளானது ஜூன் 22 ஆம் தேதி வரவுள்ளநிலையில் விஜய் ரசிகர்கள் இப்போதில் இருந்தே பிறந்தநாளைக் கொண்டாட மும்முரமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் 48 வது பிறந்தநாளில் விஜய்யின் தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் தளபதி 67 படத்தின் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இந்தத் தகவலை அறிந்த தளபதி ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#ThalapathyVijay Birthday Special Poster by @7screenstudio 👌🏻@actorvijay @Lalit_SevenScr 🤗 pic.twitter.com/KkQvdX3rwB
— Sanjeev (@SanjeeveVenkat) June 18, 2021