அரசியலில் நுழைவது குறித்து முதல்முறையாக வாய் திறந்த த்ரிஷா.. !

த்ரிஷா மாடலிங்க் துறையில் பல ஆண்டுகளாக பணி புரிந்துள்ளார். இவர் சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் சினிமாவில் கால் பதித்து 22 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருகிறார்.

நடிகை த்ரிஷா நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகிய பரமபத விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியது.

மேலும் இவர் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அரசியல் குறித்து த்ரிஷாவின் பதில்:

த்ரிஷா கடைசியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் த்ரிஷாவுக்குப் பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லை.

இந்தநிலையில் த்ரிஷா காங்கிரஸ் அரசியல் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இதுகுறித்துக் கேட்க, “எனக்கும் அரசியலுக்கும் ஒத்து வராது. அரசியலில் சேரும் எண்ணம் கொஞ்சமும் இல்லை” என்று கூறியுள்ளார்.