ஒரே நேரத்தில் ரெண்டு காதல்.. வெற்றி நடைபோடும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய பிறப்பு முதலே துரதிஷ்டசாலியான நபராக உள்ளார்.

அவர் நினைப்பதற்கு மாறாகவே அவரது வாழ்க்கையானது உள்ளது. விஜய் சேதுபதி பகலில் கார் டிரைவராகப் பணியாற்றுகிறார், இரவில் பவுன்சராகப் பணியாற்றுகிறார்.

பகல் நேரத்தில் டிரைவராக வேலை செய்தபோது நயன்தாராவையும், இரவு நேரத்தில் பவுன்சர் வேலை செய்தபோது சமந்தாவையும் காதலிக்கிறார்.

இரண்டு காதல் பிரச்சனையாக விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை சமாளித்து நயன்தாரா- சமந்தா இருவரில் யாருடன் இணைகிறார் என்பதுதான் கதை.

விஜய் சேதுபதியின் ராம்போ கதாபாத்திரம் ரசிகர்களின் பேவரைட் ஆகிவிட்டது. குடும்ப பெண்ணாக நயன்தாராவும், மாடர்ன் பொண்ணாக சமந்தாவும் அசத்தியுள்ளனர்.

மாறன், கிங்ஸ்லியின் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அனிருத் இசை படத்தின் மற்றொரு ஹீரோ. பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு வழக்கம்போல் மாஸ்தான்.