என்கிட்ட வச்சிக்காத.. தயாரிப்பாளர் ரவீந்தரை எச்சரித்த வனிதா..!

வனிதா பீட்டர் பாலை நான்காவதாகத் திருமணம் செய்து கடும் சர்ச்சைக்கு ஆளானார். வனிதாவின் நான்காவது கணவரின் முன்னாள் மனைவிக்கு ஆதரவளிக்கும் வகையில் தயாரிப்பாளர் ரவீந்திர் யூடியூப்பில் பேசி இருந்தார்.

இதனால் வனிதாவுக்கும் ரவீந்திரனுக்கும் பெரிய அளவில் பிரச்சினைகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்திர் திருமணம் குறித்து வனிதா கர்மா ஒரு பூமராங்க் என்று பதிவிட்டு இருந்தார்.

ரவீந்தர் குறித்து வனிதா கொடுத்த பகீர் பேட்டி:

இந்தநிலையில் ரவீந்தர் என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என்று கூறி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வனிதா இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

வனிதா கூறுகையில், ” பிளான் பண்ணி, ஸ்டண்ட் கிரியேட் பண்ணி என் மேரேஜ் லைஃப்யை காலி பண்ணிட்டீங்க. ரவீந்தர் உன்னோட மாஸ்டர் பிளான் எனக்குத் தெரியும். என்கிட்ட வச்சிக்காத சரியா அப்பறம் அவ்ளோதான்.

கமெண்டை டிசேபில் பண்ணிட்டு வேலையைப் பாக்க வேண்டியதுதானே. அந்த ட்வீட்டை நான் பொதுவாகத்தான் போட்டேன்” என்று கூறியுள்ளார்.