தயாரிப்பாளர் ரவீந்திரன் – மகாலட்சுமி திருமணம் குறித்து வனிதா போட்ட வைரல் போஸ்ட்.. இப்படி யாரும் வாழ்த்தி இருக்கமாட்டாங்க!

வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை விவாகரத்து ஆன நிலையில் பீட்டர் பாலை நான்காவதாகத் திருமணம் செய்து கடும் சர்ச்சைக்கு ஆளானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா நடந்து கொண்டது குறித்தும் வனிதாவின் திருமணம் குறித்தும் தயாரிப்பாளர் ரவீந்திரன் பிக் பாஸ் ரிவியூவில் பேசியுள்ளார்.

இதனால் வனிதாவுக்கும் ரவீந்திரனுக்கும் பெரிய அளவில் பிரச்சினைகள் வெடித்தன. வனிதா ரவீந்திரனை ஊடகம் என்றும் பார்க்காமல் கெட்ட வார்த்தைகளில் திட்டியது நாம் அறிந்ததே.

வனிதா போட்ட வைரல் போஸ்ட்:

வனிதா பீட்டர் பாலை விவாகரத்து செய்துவிட்டு தற்போது பிசினஸ் சுற்றுலா என பிசியாக இருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்தவாரம் ரவீந்திரனுக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் குறித்து வனிதா காரசாரமாக, “மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். கர்மா ஒரு பூமராங்க்… அவளுக்கு அதை திருப்பி கொடுக்க தெரியும் .. நான் அவளை முழுமையாக நம்புகிறேன்🤣😉” என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.

வனிதாவின் பதிவுக்கு ரசிகர் ஒருவரோ, “ஏக்கா நீ நாலு கல்யாணம் பண்ணுவ, அவரு ரெண்டாவது பண்ணதுக்கே இவ்ளோ பேச்சா” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.