செம ட்ரான்பர்மேஷன் கொடுத்த வரலட்சுமி.. மாஸா கெத்தா போட்ட போஸ்ட்டைப் பாருங்க!

வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து போடா போடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் மதகஜ ராஜா, தாரை தப்பட்டை, நிபுணன், சத்யா, மிஸ்டர். சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்க்கார், மாரி 2, நீயா 2, கன்னி ராசி, வெல்வெட் நகரம், டேனி, யானை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் காட்டேரி, பாம்பன், சேஸிங்க், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

செம ட்ரான்பர்மேஷன் கொடுத்த வரலட்சுமி:

வரலட்சுமி தன்னுடைய உடல் எடையினைக் குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும் உடல் எடை குறைத்தது குறித்து புகைப்பட்ம் வெளியிட்டு போஸ்ட் போட்டுள்ளார்.

வரலட்சுமியின் பதிவில், “#மாற்றம் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.. உன்னை நம்பு.. உன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று யாரும் சொல்ல வேண்டாம்..

தன்னம்பிக்கையே உனது சிறந்த ஆயுதம்.. உனக்கே சவால் விடு.. உனக்கு நீயே சிறந்த போட்டி.. நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.. #நம்புங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.