வீட்ல விசேஷம் திரைப்படத்தின் விமர்சனம்!

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்க அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம்.

வீட்ல விசேஷம் திரை விமர்சனம்:

இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ் ரயில்வே ஊழியராக வேலை பார்க்கிறார், அவர் தன்னுடைய மனைவி ஊர்வசி, அம்மா மற்றும் மகன்களான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் விஸ்வேஷுடன் வசித்து வருகிறார்.

அபர்ணா பாலமுரளியின் அப்பா நிறுவனராக இருக்கும் பள்ளியில் ஆர் ஜே பாலாஜி ஆசிரியராக வேலை பார்க்கிறார். அபர்ணா- ஆர்.ஜே.பாலாஜி திருமணம் செய்யத் திட்டமிட்ட நிலையில் ஊர்வசி கர்ப்பமாக இருப்பது ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரிய வருகின்றது.

ஆர்.ஜே.பாலாஜி இதுகுறித்து அபர்ணாவிடம் கூற ஒரு கட்டத்தில் அபர்ணா- ஆர்.ஜே.பாலாஜி காதலில் பிரிவு வருகின்றது. இறுதியில் குழந்தையை எப்படி ஏற்றுக் கொண்டார் மற்றும் காதலியை எப்படிக் கரம் பிடித்தார் என்பதுபோல் கதை நகர்கின்றது.

ஆர்.ஜே.பாலாஜியின் படம் என்பதற்கேற்ப நகைச்சுவையில் பின்னி எடுத்துள்ளார். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் சென்டிமெண்ட்டிலும் இந்த முறை ஸ்கோர் செய்துள்ளார் பாலாஜி.

அபர்ணா பாலமுரளி தன்னுடைய பங்கினைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார். சத்யராஜ் மற்றும் ஊர்வசி படம் முழுக்கப் பயணிக்கின்றனர். சத்யராஜ் ரசிகர்களை அப்படியே தன் பக்கம் கட்டிப் போடும் அளவில் நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

ஊர்வசி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்டுவிட்டார். திரைக்கதை, வசனம் என படத்திற்கு அனைத்துமே கூடுதல் பலங்கள்தான்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு அருமை. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் கூடுதல் மெருகேற்றியுள்ளார்.