இளைஞர்களுக்காக புது சேனல் துவக்கிய விஜய் டிவி.. பேரே வேற லெவலா இருக்கே.. குஷியில் 2 கே கிட்ஸ்!

சன் டிவி, ஜீ டிவி, கலர்ஸ் டிவி என எத்தனை சேனல்கள் இருந்தாலும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரையும் கைக்குள் கொண்ட சேனல்களில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.

விஜய் டிவி தற்போது இளைஞர்களைக் கவரும் வகையில் புது சேனல் ஒன்றினை லாஞ்ச் செய்துள்ளது.

இளைஞர்களுக்காக புது சேனல் துவக்கிய விஜய் டிவி:

அதாவது விஜய் டக்கர் என்பதுதான் அந்த சேனலின் பெயர், இந்தச் சேனலில் 2 கே கிட்ஸ்களின் காலேஜ் லைஃப், சினிமா காரம் காஃபி என்னும் இளைஞர்களுடன் நகைச்சுவை ப்ரகிராம், ட்ரக் மேல லக்கு என்ற கேம் ஷோ, ஒப்பனையாளர்களைக் கொண்டு சாதாரண மக்களை ஸ்டைல் ஆக்கும் ஸ்டைல் ஸ்டைல்தான் என்னும் நிகழ்ச்சி, நமக்குப் பிடித்த ஸ்டாருடன் ஒரு நாள் நிகழ்ச்சி, சம்திங்க் சம்திங்க் என்பது போன்ற புது நிகழ்ச்சிகள் பலவும் அதில் ஒளிபரப்பாகவுள்ளன.

இதுகுறித்த ப்ரமோ தற்போது விஜய் டிவியில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்று வருகின்றது.

அதிலும் இந்த நிகழ்ச்சிகள் இளைஞர்களைக் குறி வைக்கும் வகையில் இருப்பதால் 2 கே கிட்ஸ் விஜய் டிவியின் புதிய சேனல் லாஞ்ச் குறித்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.