அம்மா நடிகைக்கு நடந்த அவலம். நேரலையில் கதறிய விஜய் டிவி சீரியல் நடிகை. முழு வீடியோ உள்ளே!

லட்சுமி வாசுதேவன் 2013 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற தொடரில் அறிமுகமானார். இவர் வெள்ளித்திரையில் ப்ரிய சகி, சிங்கம் 2, திருட்டுக் கல்யாணம், தில்லாலங்கடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சீரியல் என்று எடுத்துக் கொண்டால் தற்போது ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, முத்தழகு, சுந்தரி போன்ற சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஹவுஸ் ஆஃப் லட்சுமி என்ற பிராண்டில் புடவைகள், ரவிக்கை, நகைகள் விற்கும் ஆன்லைன் பிசினஸ் எனப் பிசியாக இருந்து வருகிறார்.

நேரலையில் கதறிய விஜய் டிவி சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன்:

இந்தநிலையில் இவர் நேற்று சமூக வலைதளத்தில் கதறி அழுவதுபோல் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவ2 5 லட்சம் பணம் ஜெயித்துவிட்டதாக ஒரு மெசேஜ் வந்ததாகவும், அந்த மெசேஜை ஓப்பன் செய்தபோது ஒரு லோன் ஆப் டவுன்லோடு ஆகியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆப் டவுன்லோடு ஆனதும் மொபைல் ஹேக் செய்யப்பட்டதுபோல் உணர்ந்துள்ளார். இந்தநிலையில் இவரது மொபைலில் உள்ள சில போட்டோக்களை மார்பிங்க் செய்து லட்சுமியின் வாட்ஸ் அப் கான்டெக்ட்டில் உள்ள நபர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

பெற்றோர் உட்பட அனைவருக்கும் மோசமான போட்டோக்களை அனுப்பியது குறித்து லட்சுமி கதறி அழுதவாறே கூறியுள்ளார்.

யாரும் என்னைப் போல் அஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.